ரி-20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடர்களில் பங்கேற்பதற்காக இந்திய மகளிர் கிரிக்கெட் அணி இலங்கையை வந்தடைந்துள்ளது.
சுற்றுலா இந்திய மகளிர் அணிக்கும் இலங்கை மகளிர் அணிக்கும் இடையே ரி-20 மற்றும் ஒருநாள் தொடர்கள் இடம்பெறவுள்ளது.
குறித்த தொடர்களில் விளையாடும் இந்திய மகளிர் அணி நேற்றைய தினம் இலங்கையை வந்தடைந்துள்ளது.
இரு அணிகளுக்கும் இடையில் மூன்று போட்டிகள் கொண்ட ரி-20 தொடரும், மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரும் இடம்பெறவுள்ளது.
ரி-20 தொடர்
1வது போட்டி - ஜூன்-23
2வது போட்டி - ஜூன்-25
3வது போட்டி - ஜூன்-27
ஒருநாள் தொடர்
1வது போட்டி - ஜூலை-01
2வது போட்டி - ஜூலை-04
3வது போட்டி - ஜூலை-07
குறித்த போட்டிகள் அனைத்தும் தம்புள்ளை விளையாட்டு மைதான்த்தில் இடம்பெறவுள்ளது.
Category: விளையாட்டு, புதிது
Tags: இந்தியா, இலங்கை